அனைத்து இடங்களிலும் 4 ஜி சேவையை விரைவில் தொடங்க வேண்டும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மாநாட்டில் தீர்மானம்


அனைத்து இடங்களிலும் 4 ஜி சேவையை விரைவில் தொடங்க வேண்டும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 Feb 2021 10:31 PM IST (Updated: 20 Feb 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

4 ஜி சேவையை விரைவில் தொடங்க வேண்டும்

தர்மபுரி:
அனைத்து இடங்களிலும் 4 ஜி சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் மாவட்ட மாநாடு
தர்மபுரி மாவட்ட பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க முதல் மாவட்ட மாநாடு மற்றும் பி.எஸ்.என்.எல். 2.0 கருத்தரங்கம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு சங்க மாவட்ட தலைவர் ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். சங்கத்தின் மாநில செயலாளர் விக்டர் சாம்சங், மாநில செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் சுபா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். 
இந்த நிகழ்ச்சியில் தொலைத்தொடர்பு மாவட்ட துணை பொது மேலாளர்கள் கலந்து கொண்டு 2.0 புத்தாக்கத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி பேசினர். இதில் மத்திய சங்க நிர்வாகி நித்திய ஜெரால்டு, மாநில சங்க நிர்வாகி புகழரசன், மாவட்ட துணை தலைவர் ஜவஹர், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசலு, ராஜேஷ்குமார், ரமேஷ் மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாரத் நெட் திட்டம்
தர்மபுரி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் 4 ஜி சேவையை விரைவில் தொடங்க வேண்டும். பாரத் நெட் திட்டத்தை பி.எஸ்.என்.எல். பாரத் பைபர் சேவை மூலமாக அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்க வேண்டும். மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல். சேவையை மட்டும் பயன்டுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Next Story