பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2021 10:36 PM IST (Updated: 20 Feb 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி சிற்றரசு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி தீபன்குமார், விவசாய பிரிவு மணிகண்டன், மாவட்ட பொருளாளர் முத்து, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், வட்டார தலைவர்கள், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சிலிண்டருக்கு மாலை
ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், இருசக்கர வாகனத்திற்கு கயிறை கட்டி இழுத்தும் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முடிவில் மாவட்ட பிற்பட்டோர் பிரிவு தலைவர் நவீன் நன்றி கூறினார்.

Next Story