ஈரோடு அகில்மேடு வீதியில் சாக்கடையாக ஓடிய மழை நீர்
ஈரோடு அகில்மேடு வீதியில் மழைநீர் சாக்கடையாக ஓடியது.
ஈரோடு அகில்மேடு வீதியில் மழைநீர் சாக்கடையாக ஓடியது.
திடீர் மழை
ஈரோட்டில் நேற்று திடீர் என மழை பெய்தது. மாலையில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அகில் மேடு வீதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம், சாக்கடையுடன் கலந்து கருமை நிறத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.
அங்குள்ள சில மெக்கானிக் கடைகளில் சாக்கடை நீர் புகுந்தது. பணியாளர்கள் தண்ணீரை வெளியேற்ற மிகவும் சிரமப்பட்டனர்.
மின்கம்பம்
சாக்கடை அடைப்பை அகற்ற பலரும் குச்சிகளை வைத்து சாக்கடையை சுத்தம்செய்ய முயன்றனர். பாலித்தீன் பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்ததால் ஆங்காங்கே அடைத்து வெள்ளம் சாலையில் பெருகியது.
சிக்கய்யநாயக்கர் கல்லூரி அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் மழையில் மின் கம்பம் ஒன்று சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதனால் ஆபத்து இல்லை. மின்கம்பம் சாய்ந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபோல் பல பகுதிகளிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டது.
-----------------
Related Tags :
Next Story