வாலிபரை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது


வாலிபரை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 20 Feb 2021 11:44 PM IST (Updated: 20 Feb 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வாலிபரை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்:
திருப்பூரில் வாலிபரை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலை முயற்சி 
திருப்பூர் பூலவாடி சுகுமார் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது30). இவரை கடந்த மாதம் 11-ந் தேதி முன்விரோதம் காரணமாக  காங்கேயம் கிராஸ் ரோடு காயிதே மில்லத் நகரை சேர்ந்த  ஷேக் முகமது (38) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதையடுத்து தெற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இருப்பினும் ஷேக் முகமது பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து வந்ததால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது 
அதன்படி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஷேக் முகமது மீது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் 5 வழிப்பறி வழக்குகளும், ஒரு திருட்டு வழக்கும், மத்திய போலீஸ் நிலையத்தில் 4 வழிப்பறி வழக்குகளும், வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும் என 13 வழக்குகள் உள்ளன. ஏற்கனவே இவர் வழிப்பறி வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
இதற்கிடையே குண்டர் சட்டத்திற்கான ஆணை நேற்று ஷேக் முகமதுவிடம் வழங்கப்பட்டது. தற்போது வரை இந்த ஆண்டில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story