நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல்


நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Feb 2021 12:02 AM IST (Updated: 21 Feb 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூர்;
கோட்டூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
நெல் கொள்முதல்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே அருகே கருவக்குளத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 3-ம் சேத்தி ஊராட்சி கருவக்குளம் கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலமாக அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட கலெக்்டர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் சென்று மனுகொடுத்து வலியுறுத்தி வந்தனர். 
சாலை மறியல்
மேலும் கருவக்குளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அனைவரும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையம் திறக்க உள்ள இடத்தில் அடுக்கி வைத்திருந்தனர். ஒரு மாதமாகியும் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்தும், உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் சார்பில் நேற்று கருவக்குளத்தில்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு  மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், விவசாய தொழி லாளர் சங்க ஒன்றிய துணை செயலாளர் செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாசில்தார் தெய்வநாயகி, மண்டல துணை மேலாளர் ஜேக்கப்சற்குணம் ஆகியோர் போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  நெல்கொள்முதல் நிலையம் நாளை(திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார் குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story