காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அந்த வேளாண் சட்டங்களையும், பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பு தொடங்கிய பாதயாத்திரையை கட்சியின் மேலிட பொறுப்பாளரும், மாநில தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினருமான ஜான் அசோக் வரதராஜன் தொடங்கி வைத்தார். பாதயாத்திரை பாலக்கரை, வெங்கடேசபுரம் வழியாக ரோவர் வளைவுக்கு சென்று முடிவடைந்தது. பின்னர் அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்கள், பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story