சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சேந்தமங்கலம், குமாரபாளையம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 135 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வயதான வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்வு தளம், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காந்திபுரம் எஸ்.ஆர்.ஏ. நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி, துத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் புதிதாக ஏற்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் (பொறுப்பு) செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story