மேலநீலிதநல்லூரில் கல்லூரி முதல்வர்-மாணவர்கள் மீது வழக்கு


மேலநீலிதநல்லூரில்   கல்லூரி முதல்வர்-மாணவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Feb 2021 1:37 AM IST (Updated: 21 Feb 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

மேலநீலிதநல்லூரில் கல்லூரி முதல்வர், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இயற்பியல் துறை இணை பேராசிரியராக பணியாற்றிய சிவகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார். 

பின்னர் பணிக்கு திரும்பி வந்த அவருக்கு மேலும் சஸ்பெண்டை நீட்டித்ததாக கூறி, கல்லூரி நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் பேராசிரியர் சிவகுமாருக்கு ஆதரவாக சில மாணவர்கள் கல்லூரி முதல்வர் ஹரி கங்காராமிடம் முறையிட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த கல்லூரி முதல்வர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் அளித்த புகாரின்பேரில், சில மாணவர்கள் மீது பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேேபான்று மாணவர்கள் அளித்த புகாரின்பேரில், கல்லூரி முதல்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story