தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம்


web photo
x
web photo
தினத்தந்தி 21 Feb 2021 1:38 AM IST (Updated: 21 Feb 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம் நாளை தாடங்குகிறது.

கரூர்:
கரூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் கலைக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய தபால் துறை கரூர் கோட்டம் சார்பில் ஆதார் அட்டைகளில் திருத்த சிறப்பு முகாம் நாளை(திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி பசுபதிபாளையம், செங்குந்தபுரம், காகிதபுரம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், பள்ளபட்டி, பள்ளபட்டி பஜார், பரமத்தி, புகழூர், புலியூர், வேலாயுதம்பாளையம், வெள்ளியணை, வெங்கமேடு, சிந்தாமணிபட்டி, இளங்காகுறிச்சி, கோவில்பட்டி, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, மணப்பாறை, மாயனூர், நங்கவரம், பாலக்குறிச்சி, பஞ்சப்பட்டி, தரகம்பட்டி, தோகைமலை, துவரங்குறிச்சி, வைகநல்லூர், வையம்பட்டி ஆகிய துணை அஞ்சலகங்களிலும் கரூர், குளித்தலை ஆகிய தலைமை தபால் நிலையங்களிலும் ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் ஆகியவற்றை காலை 8 மணி முதல் செய்து கொள்ளலாம். 
சிறப்பு முகாமின் போது ஆதார் புதிதாக பதிதல் (கட்டணம் கிடையாது), பெயர், விலாசம், ெசல்போன் எண், ஈ மெயில் ஐ.டி. திருத்தம்(கட்டணம் ரூ.50), மற்றும் பயோமெட்ரிக் அப்டேஷன் (கட்டணம் ரூ.100). குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்கு தாய் அல்லது தந்தையின் (சரியான விலாசம் உள்ளவரின்) ஆதார் அடையாள சான்று, இருப்பிட சான்று மற்றும் குழந்தையின் அசல் பிறப்பு சான்று கொண்டு வர வேண்டும். செல்போன் எண் மற்றும் இ-மெயில் ஐ.டி. திருத்தத்திற்கு ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story