பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி
சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டா் பெட்ரால் ரூ.100-ஐ தொட்டு வருகிறது. டீசலும் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.இதனால், பஸ், லாரி, டிராக்டர், பொக்லைன் எந்திரங்கள் மற்றும் அனைத்து கன ரக வாகன உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வை தாக்குப்பிடிக்க முடியாமல் சைக்கிளுக்கு மாறி விடலாமா? என்றும் உள்ளனர்.
அரவக்குறிச்சி மற்றும் ஈசநத்தம் பகுதியை சேர்ந்த உரிமையாளர்கள் சிலர், அதனை வாடகைக்கு விட்டு அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றம் காரணமாக ஏற்கனவே விட்ட வாடகை கட்டுப்படியாகாததால் பாதிக்கப்பட்ட அவர்கள் டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று அரவக்குறிச்சி மற்றும் ஈசநத்தத்தில் பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். வேலைநிறுத்தம் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.
Related Tags :
Next Story