ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத்தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கமுடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். 10 மாத காலமாக வழங்கப்படாத குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் பிச்சுமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், மாவட்ட செயலாளர் காத்தமுத்து, பொருளாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story