அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
சத்திரப்பட்டி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்,
சத்திரப்பட்டி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சத்திரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் போதிய வசதிகள் இன்றி காணப்பட்ட இப்பள்ளி பின்னர் பொது நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அப்பகுதியைச்சேர்ந்த தொழிலதிபர்கள், ஆகியோர்களால் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
எண்ணிக்கை அதிகரிப்பு
ஆனால் மாணவர்களுக்கென்று விளையாட்டு மைதானம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சத்திரப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது இந்த பள்ளியில் ஆங்கில கல்வியும் தொடங்கி விட்டது. மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
விளையாட்டு மைதானம்
மாணவர்களிடம் விளையாட்டு திறன் மேம்பாடு அதிகம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஒரு நல்ல விளையாட்டு மைதானம் இல்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story