பிளஸ்-1 மாணவிக்கு டெங்கு காய்ச்சல்


பிளஸ்-1 மாணவிக்கு டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 21 Feb 2021 2:17 AM IST (Updated: 21 Feb 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே பிளஸ் 1 மாணவிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ்-1 மாணவி. பெற்றோரை இழந்த மாணவி, ஏரிப்பாளையத்தில் உள்ள தனது பாட்டியின் பராமரிப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவி, பண்ருட்டியை அடுத்துள்ள சின்ன எலந்தம்பட்டு கிராமத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மேலும் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாணவியை, அவரது பெரியப்பா சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியை டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேல்குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய, சுகாதார அலுவலர்கள் ஏரிப்பாளையம் பகுதிக்கு சென்று, அப்பகுதி மக்கள் யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என பரிசோதனை செய்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story