முத்தூரில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்


முத்தூரில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
x
தினத்தந்தி 21 Feb 2021 2:19 AM IST (Updated: 21 Feb 2021 6:09 AM IST)
t-max-icont-min-icon

முத்தூரில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த 5 மாத காலமாக பருவகால சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் கடும் குளிர் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் பெய்ததால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. 

இதன்படி முத்தூர் கடைவீதி, பஸ் நிலையம், காங்கேயம் சாலை, வெள்ளகோவில் சாலை, ஈரோடு சாலை, கொடுமுடி சாலை, நத்தக்காடையூர் சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. 
மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இப்பகுதிகளில் கோடை காலம் தொடங்க இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் நேற்று திடீரென்று பெய்த திடீர் மழையால் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன விவசாயிகள் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story