வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கால் 50 கிராமங்களுக்கு எச்சரிக்கை


வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கால் 50 கிராமங்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2021 2:40 AM IST (Updated: 21 Feb 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே தொழுதூரில் வெள்ளாற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. இந்த பகுதி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் வெள்ளம் தொட்டபடி வந்தது. தொழுதூர் அணைக்கட்டில் கடந்த 2 வாரமாக பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அணைக்கட்டின் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டில் உள்ள 16 மதகுகளில் 5 மதகுகள் திறந்து விடப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வெள்ளாற்றின் கரையோரமுள்ள கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தாசில்தார் சையது அபுதாஹீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக தண்டோரா மூலம் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. 

Next Story