கருத்தரங்கம்
கருத்தரங்கம்
காரியாபட்டி,
மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் தங்கள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக காரியாபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளுடன் மூன்று மாத காலத்திற்கு தங்கி பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். குரண்டி கிராமப்புற பகுதியில் உள்ள நிலக்கடலை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாய கல்லூரி மாணவிகள் - பார்கவி, சந்தியா, சரிகா, சாருலதா, ஷாலினி, சினேகா கலந்துரையாடினர். மேலும் தமிழ்நாடு நீடித்த நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கத்தின் சார்பாக அரசு ஆசிரியர், இயற்கை விவசாயியான கந்தசாமியுடன் இணைந்து உயிரூட்டிய தொழு உரம், இயற்கை கரைசல்கள் மற்றும் தொழில்நுட்ப கருத்துகளை மாணவிகள் வழங்கினர்.
Related Tags :
Next Story