அந்தியூரில் ரூ.42 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை
அந்தியூரில் ரூ.42 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனையானது.
அந்தியூரில் ரூ.42 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனையானது.
தேங்காய்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 982 மூட்டை துவரையை கொண்டுவந்திருந்தார்கள். இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 4 ஆயிரத்து 959 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 6 ஆயிரத்து 670 ரூபாய்க்கும் ஏலம் போனது.
8 ஆயிரத்து 415 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் சிறிய தேங்காய் ஒன்று 6 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் 22 ரூபாய்க்கும் ஏலம் போனது.
மொத்தம் 98 ஆயிரத்து 436 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய்
கொப்பரை தேங்காய் 23 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக 19 ஆயிரத்து 89 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 13 ஆயிரத்து 26 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 76 ஆயிரத்து 622 ரூபாய்க்கு விற்பனையானது.
மக்காச்சோளம் 481 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.1,543-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,548-க்கும் ஏலம் போனது. மொத்தம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனையானது.
நரிப்பயிர்
நரிப்பயிர் 20 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.7,217-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7,481-க்கும் ஏலம் போனது. மொத்தம் 78 ஆயிரத்து 783 ரூபாய்க்கு விற்பனையானது.
உளுந்து 12 முட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக ரூ.6,232-க்கும், அதிக பட்ச விலையாக ரூ7,229-க்கும் ஏலம் போனது. மொத்தம் 56 ஆயிரத்து 907 ரூபாய்க்கு விற்பனையானது.
வியாபாரிகள்
ஆமணக்கு 14 முட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.3,469-க்கும், அதிக பட்ச விலையாக ரூ.3,969-க்கும் ஏலம் போனது. மொத்தம் 22 ஆயிரத்து 9 ரூபாய்க்கு விற்பனையானது.
ஏலத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் 42 லட்சத்து 16 ஆயிரத்து 766 ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு, பெருந்துறை, தர்மபுரி, மைசூர், விருதுநகர், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விவசாய விளை பொருட்களை வாங்கிச்சென்றார்கள்.
Related Tags :
Next Story