சேலத்தில் இளம்பெண் குளிப்பதை படம் எடுக்க முயன்ற வாலிபர் கைது


சேலத்தில் இளம்பெண் குளிப்பதை படம் எடுக்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2021 5:56 AM IST (Updated: 21 Feb 2021 5:58 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இளம்பெண் குளிப்பதை படம் எடுக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்,

ஈரோட்டை சேர்ந்தவர் வல்லரசு (வயது 21). இவர் மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். 

அந்த வழியாக சென்ற வல்லரசு செல்போனில் இளம்பெண் குளிப்பதை படம் எடுக்க முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் வல்லரசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story