சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்,
பனமரத்துப்பட்டி அருகே ஜல்லூத்துப்பட்டியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 24). கூலித்தொழிலாளி. கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி தனது வீட்டின் முன்பு உள்ள தெருவில் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது, சிறுமியிடம் சாக்லெட் தருவதாக தனசேகரன் கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுததால் இது தொடர்பாக பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story