கொரோனா தடுப்பூசி போடும்படி அதிகாரிகள் மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்த அங்கன்வாடி ஊழியர்கள்
கொரோனா தடுப்பூசி போடும்படி அதிகாரிகள் மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்த அங்கன்வாடி ஊழியர்கள்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர். அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு் கொள்ள வேண்டும். அவ்வாறு கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் வேலையை விட்டு நிறுத்தி விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இது தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story