சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’


சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’
x
தினத்தந்தி 21 Feb 2021 3:47 PM IST (Updated: 21 Feb 2021 3:47 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’ எல்.முருகன் பேட்டி.


ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. சந்திக்க களத்தை தயார் செய்து வருகிறது. நான் போட்டியிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டால், நிச்சயமாக போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி வர உள்ளார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை சேலத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் விருப்ப மனு வாங்குவதில்லை என முடிவு செய்து இருக்கிறோம். வேளாண் சட்டம், நீட் உள்ளிட்ட சட்டங்களை கொண்டு வந்து விட்டு, மக்கள் மத்தியில் போலியான நாடகத்தை காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சிகள் நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அதை கொண்டு வந்தது பா.ஜ.க.தான்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story