ஆவடியில் ரூ.3½ லட்சம் இரும்பு பொருட்கள் திருடிய இருவர் கைது


ஆவடியில் ரூ.3½ லட்சம் இரும்பு பொருட்கள் திருடிய இருவர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2021 4:10 PM IST (Updated: 21 Feb 2021 4:10 PM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் ரூ.3½ லட்சம் இரும்பு பொருட்கள் திருடிய இருவர் கைது.

ஆவடி, 

ஆவடி சி.டி.எச். சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பூபாலன் (வயது 68) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி அந்த கட்டிடத்தின் கட்டிடத்திற்குள் லாரியில் இருந்த சுமார் 350 இரும்பு தகடுகள் மற்றும் 20 இரும்பு பைப்புகள் ஆகியவற்றை பூபாலன் உதவியுடன் திட்டமிட்டு திருடி சென்றனர். இதுகுறித்து அந்த கட்டிட உரிமையாளர் ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (29) என்பவர் ஆவடி போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று காலை இரும்பு தகடுகள் மற்றும் இரும்பு பைப்புகளை திருடிய சென்னை தாம்பரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் (24) மற்றும் சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்த வேணுகோபால் (42) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து லாரி மற்றும் சுமார் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள இரும்பு தகடுகள் மற்றும் இரும்பு பைப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story