ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 5:13 PM IST (Updated: 21 Feb 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை, இரவில் நம்மாழ்வார் 4 ரத வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
வருகிற 25ந் தேதி (வியாழக்கிழமை) கருட சேவை நடக்கிறது. இதில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.
1ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. கீழ ரத வீதியில் இருந்து தேர் புறப்பட்டு 4 ரத வீதி சென்று மீண்டும் கீழ ரத வீதியை வந்தடையும்.
தெப்ப திருவிழா
2, 3ந் தேதிகளில் தெப்ப திருவிழா நடக்கிறது. முதல் நாள் தெப்பத்தில் பொலிந்து நின்ற பிரான், 2ம் நாள் தெப்பத்தில் சுவாமி நம்மாழ்வார் மற்றும் ஆச்சாரியர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 4ந் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. சுவாமி நம்மாழ்வார் அவதரித்த தலம் என்பதால் இங்கு மாசி உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும்.
கொடியேற்றம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பொன்னி செய்திருந்தார். வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story