தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் கேட்கும் அதிகாரி.
தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய அதிகாரி லஞ்சம் ேகட்பதாக, புகார்.
சேத்துப்பட்டு
விவசாய கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு, விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. விவசாய கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சீயமங்கலத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவி என்பவர் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரகாஷ், மைதிலி மற்றும் போலீசார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சார் பதிவாளர்கள் ஆகியோர் தேசூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ெபண் விவசாயி தேவி, பயிர் கடனாக கடந்த 24.10.2000 அன்று ரூ.40 ஆயிரம் கடன் பெற்றுள்ளதும், அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதும் தெரிய வந்தது. அந்தக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, கூட்டுறவு கடன் சங்க அதிகாரி ஒருவர், விவசாயி தேவியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்காத விவசாயிகளின் பெயரிலும் கடன் வாங்கியது போல் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய கடனை தள்ளுபடி செய்ய அதிகாரி ஒருவர், விவசாயிகள் பலரிடம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
விரைவில் கைது
இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் கூறுகையில், கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய, அதிகாரி ஒருவர் விவசாயிகள் பலரிடம் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தது. அந்த அதிகாரியிடம் தீவிர விசாரணை நடத்தப்படும். அந்த அதிகாரி வேறு ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும், முறைகேடுகள் கண்டு பிடிக்கப்பட்டால், விரைவில் அதிகாரி கைது செய்யப்படுவார், எனத் தெரிவித்தார்.
Related Tags :
Next Story