அம்மா மினி கிளினிக் திறப்பு


அம்மா மினி கிளினிக் திறப்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 6:59 PM IST (Updated: 21 Feb 2021 6:59 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார்.

மீஞ்சூர், 

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் பிரபாகரன், அத்திப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், ஊராட்சியில் இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் பொன்னேரி தொகுதியில் 6 அம்மா மினி கிளினிக் ஒதுக்கப்பட்டது. அதில் 3 கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 கிளினிக் விரைவில் தொடங்கப்படும். வடசென்னை அனல்மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த 546 பேருக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம், தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி, மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜேஷ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story