வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மீட்பு


வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மீட்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 7:46 PM IST (Updated: 21 Feb 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மீட்கப்பட்டார்

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரண்மனை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சிறுமியிடம் விசாரித்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் என்பதும், ராமநாதபுரத்தில் சித்தி வீட்டில் தங்கி, தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகவும், வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியே வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்ட பெற்றோரிடம் சிறுமியை போலீசார் ஒப்படைத்தனர்.உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பாராட்டினார்.

Next Story