குன்னூரில் பலத்த மழை
குன்னூரில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்தன.
குன்னூர்,
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் வரை கடும் உறைபனி நிலவியது. இதனால் தேயிலை செடிகள் மற்றும் காய்கறி பயிர்கள் கருகி வந்தன. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதி ஆகிய நாட்களில் இரவில் பலத்த மழை பெய்தது. இ்ந்த மழை விவசாயத்துக்கு ஏற்றதாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மரங்கள் விழுந்தன
பலத்த மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 2 ராட்சத மரங்கள் விழுந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து மின்வாள் மூலம் மரங்களை கொட்டும் மழையிலும் துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். அதன்பின்னர் அந்த வழியே போக்குவரத்து சீரானது.
கோத்தகிரி சாலை
இதேபோன்று குன்னூர்-கோத்தகிரி சாலையில் வட்டப்பாறையில் ஒரு மரம் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story