திருக்கல்யாண வைபோகம்
திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி நடந்தது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.வி.மங்கலத்தில் உள்ள திருக்கயிலை பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஜந்து கோவில் திருக்கோவில்களில் ஒன்றான எஸ்.வி.மங்கலத்தில் உள்ள ஆத்ம நாயகி அம்பாள் உடணுறை ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையெட்டி மண்டப காரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
5-ம் நாள் திருவிழாவான நேற்று திருக்கல்யாண வைபோகம் காலை 12 மணி அளவில் நடைபெற்றது. முன்னதாக விழாவிற்கு கோவில் பேஸ்கர் கேசவன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராமன் மற்றும் எஸ்.வி. மங்களம் கிராம அம்பலகாரர் காந்தி அம்பலம், மருதி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன், எஸ்.வி.மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சீனிவாசன், பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன் மற்றும் எஸ்.வி. மங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காந்திதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரான்மலை ஜோதிட சிகாமணி பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை திருக்கோவில் தலைமை குருக்கள் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சுப்ரமணிய குருக்கள் உள்பட 9 பேர் கொண்ட குருக்கள் திருமண வைபோகத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக பெண் அழைப்பு மற்றும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பரம்பரை மண்டகப்படியாளரான காளமேகம் பிள்ளை ரமணி அம்மாள் (பரம்பரை கணக்கு ஸ்தானிகர்) சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) சமணர்களுக்கு சாப விமோச்சனம் வழங்கிய விழாவான கழுவன் திருவிழா நடைபெறுகிறது. 25-ந் தேதி திருத்தோர் திருவிழா நடக்கிறது. 10-ம் நாள் தீர்த்தவாரி நடைபெற்று மாசி மகத்தில் 26-ந் தேதியில் புகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.
Related Tags :
Next Story