வைக்கோல் விற்பனை தீவிரம்


வைக்கோல் விற்பனை தீவிரம்
x
தினத்தந்தி 21 Feb 2021 9:29 PM IST (Updated: 21 Feb 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

வைக்கோல் விற்பனை தீவிரம்

மடத்துக்குளம், 
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடத்தூர், கணியூர், சோழமாதேவி, வேடபட்டி, துங்காவி, காரத்தொழுவு, போன்ற பல்வேறு பகுதிகளில் நெற்பயிர் அறுவடை முடிந்து, வைக்கோல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வைக்கோல் வியாபாரிகள் கூறியதாவது:-
 மடத்துக்குளம் பகுதியில் தற்போது அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலங்களில் எஞ்சியுள்ள வைக்கோல் விற்பனை தொடங்கியுள்ளது. இதனையடுத்து கையால் கட்டப்படும் வைக்கோலானது, 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள வைக்கோல் ரூ. 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை எந்திரத்தால் கட்டப்படும் 3 அடி அளவுள்ள வைக்கோல் கட்டானது  ரூ.180 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வைக்கோல் 1 ஏக்கருக்கு குறைந்தபட்சம் 30 கட்டுகள் கிடைக்கிறது. 
இந்த வைக்கோல் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அறுவடை முடிந்து அடுத்து வரும் அறுவடை காலங்கள் வரை, சுமார் 5 மாதங்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை, கால்நடை வளர்ப்போர், இப்போதே சேகரித்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
 இவ்வாறு அவர் கூறினார். 

Next Story