மத்திய அரசை கண்டித்து பாபநாசத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்


மத்திய அரசை கண்டித்து பாபநாசத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Feb 2021 9:40 PM IST (Updated: 21 Feb 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் விரோத போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து பாபநாசத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.

பாபநாசம், 

விவசாயிகள் விரோத போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து பாபநாசத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தெற்குராஜவீதி, கடைவீதி, ெரயில்வே நிலைய சாலை வழியாக பாபநாசம் புதிய பஸ் நிலையத்தை ஊர்வலம் வந்தடைந்தது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதிராஜா, மாவட்ட துணைத்தலைவர் ரெங்கராஜன், திருவையாறு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் ராஜீ, மாவட்ட பொதுச் செயலாளர்கள் அய்யப்பன், தமிழ்ச்செல்வன், பாபநாசம் நகர தலைவர் சபாபதி, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story