சின்னசேலம்-மூங்கில்பாடி சாலையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்


சின்னசேலம்-மூங்கில்பாடி சாலையில்  அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 21 Feb 2021 9:45 PM IST (Updated: 21 Feb 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் மூங்கில்பாடி சாலையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

சின்னசேலம்
 
ஆக்கிரமிப்பு

சின்னசேலத்தை சுற்றிலும் அதிக அளவில் கிராமங்கள் உள்ளன. பணி மற்றும் படிப்பு, மருத்துவ சிகிச்சை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பஸ்களில் வெளியூர் செல்ல விரும்புவர்கள் சின்னசேலத்துக்கு வந்து பின்னர் இங்கிருந்து கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், சேலம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய நகரங்களுக்கு செல்கின்றனர். இதனால் சின்னசேலத்தில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

 இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் அதிகரித்து வரும் ஆகிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் குறித்த நேரத்துக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக சின்னசேலத்தில் இருந்து மூங்கில்பாடி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கடைகள் நடத்தி வருபவர்கள் கடைகளின் முன்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளனர். 

நடவடிக்கை

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆத்திர அவசரத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அந்த வழியை கடந்த செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே மூங்கில்பாடி செல்லும் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்து இருந்து பார்போம்.

Next Story