அஞ்சாமடை கிராமத்திற்கு பஸ் வசதி
அஞ்சாமடை கிராமத்திற்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் அஞ்சாமடை கிராமத்தின் நீண்டநாள் கோரிக்கையாக பஸ் வசதி மற்றும் ரேஷன் கடை வசதி செய்து தரும்படி தேர்தல் பிரசாரத்திற்கு வந்த சதன் பிரபாகரனிடம் கோரிக்கை வைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதி நேர ரேஷன் கடையாக தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. தற்போது பொதுமக்கள், மாணவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் பயன்படும் வகையில் பஸ் வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி யில் நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஒன்றியக்குழு தலைவர் வினிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சமடை கிளைசெயலாளர் கருணாகரன் வரவேற்றனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் வக்கீல் நவநாதன், மாவட்ட இலக்கியணி தலைவர் நல்லதம்பி, அவைத் தலைவர் சுந்தர்ராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வாதவநெறி ரஜினிகாந்த், வல்லம் துரைசிங்கம், பொட்டகவயல் தனபால், ஒன்றிய விவசாயஅணி செயலாளர் பூமிநாதன், அ.கச்சான் ராசு, ஊராட்சி தலைவர்கள் வணியவல்லம் நாகநாதன், அ. கச்சான் நாகராஜ், ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியேந்திரன், போகலூர் இளைஞர் பாசறை தலைவர் துரத்தியேந்தல் முருகன், கடம்பூர் சிவா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் துரை.கே. கவிராஜா, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் குணசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சோலைமுருகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சாத்தையா, இளைஞர் பாசறை இணை செயலாளர் சங்கரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story