சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு


சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு
x

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடு முட்டியதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை,
 சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடு முட்டியதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.  மாணவரணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நளையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட மாணவரணி செயலாளர் என்.எம்.ராஜா வரவேற்றார். கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கருணாகரன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரிசு
விழாவில் மொத்தம் 18 மாடுகள் கலந்து கொண்டன. ஒரு மாட்டிற்கு 25 நிமிடம் ஒதுக்கப்பட்டது. ஒரு மாட்டிற்கு 9 மாடுபிடி வீரர்கள் வீதம் மாட்டை அடக்கினார்கள். ஒவ்வொரு மாட்டிற்கும் குத்துவிளக்கு மற்றும் பொருட்கள் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாடு மற்றும் வீரா்களுக்கு ரூ. 7,300 பரிசாக வழங்கபட்டது. 
இதுதவிர போட்டியை காண வந்த ஏராளமானவர்கள் சிறப்பு பரிசு வழங்கினார்கள். மாடு முட்டியதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர் இதில் 2 பேர் சிவகங்கை அரசு மருத்தவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்த மருத்துவ குழுவிடம் முதல் உதவி சிகிச்சை பெற்று சென்றனர்.

Next Story