ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Feb 2021 10:42 PM IST (Updated: 21 Feb 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளரை கைது செய்தனர்.

திருவாரூர்:
திருவாரூரில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை 
தமிழகத்தில் குட்கா மற்றும் ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் இந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் மறைமுகமாக கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட பொருட்கள் என்பதால் மறைமுக விற்பனையின் போது வழக்கமான விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்கள் சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு வினியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் காட்டுக்கார தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் சுபா‌‌ஷ் (வயது39) என்பவர் மொத்தமாக வாங்கி அதனை கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடை உரிமையாளர் கைது 
அதன்படி நேற்று திருச்சியில் இருந்து பார்சல் மூலம் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் சுபா‌‌ஷ் கடைக்கு வந்ததாக திருவாரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் சோதனை செய்தனர். அப்போது 4 மூட்டைகளில் 12 ஆயிரம் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் சுபாசை கைது செய்தனர்.

Next Story