ஊத்துக்குளியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவு
ஊத்துக்குளியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவு
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று முன்தினம் பெய்த மழை அளவின் விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- திருப்பூர் வடக்கு 11 மி.மீட்டரும், அவினாசியில் 2 மி.மீ, பல்லடத்தில் 7 மி.மீ, ஊத்துக்குளியில் 40 மி.மீ, மூலனூரில் 16 மி.மீ, குண்டடத்தில் 10 மி.மீ, திருமூர்த்தி அணைப்பகுதியில் 2 மி.மீ, உடுமலையில் 22.60 மி.மீ, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் 7 மி.மீ, வெள்ளகோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலக பகுதி 11.30 மி.மீ, திருமூர்த்தி அணை உள்பகுதி 1 மி.மீ, திருப்பூர் தெற்கு 6 மி.மீ என மாவட்டம் முழுவதும் சேர்த்து 135.10 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் சராசரி 8.44 மி.மீட்டர் ஆகும்.
Related Tags :
Next Story