புதிய குடிநீர் தொட்டிகள் திறப்பு
புதிய குடிநீர் தொட்டிகள் திறக்கப்பட்டன
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ஜீவாநகர், பெருமாள் கோவில் தெரு, நயினார்கோவில் சாலை ஆகிய 3 இடங்களில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக ஆழ்குழாய் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அதன் பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அதை சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார். நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், நகர் ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் கார்த்தி, ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துக்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சந்திரசேகர் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story