நெமிலி, பனப்பாக்கத்தில் 234 மாணவர்கள் தேசிய வருவாய் திறனாய்வு தேர்வை எழுதினர்.
நெமிலி, பனப்பாக்கத்தில் 234 மாணவர்கள் தேசிய வருவாய் திறனாய்வு தேர்வை எழுதினர்
நெமிலி
8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 என்ற அடிப்படையில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த தேசிய வருவாய் திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 126 மாணவர்களும், பனப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 108 மாணவர்களும் என மொத்தம் 234 மாணவர்கள் தேசிய வருவாய் திறனாய்வு தேர்வு தேர்வு எழுதினர்.
Related Tags :
Next Story