ஓரியூரில் புதிய சிவன் கோவில் கட்ட பூமிபூஜை


ஓரியூரில் புதிய சிவன் கோவில் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 21 Feb 2021 11:04 PM IST (Updated: 21 Feb 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

ஓரியூரில் புதிய சிவன் கோவில் கட்ட பூமிபூஜை நடந்தது

தொண்டி, 
திருவாடானை யூனியன் ஓரியூரில் புதிதாக மட்டுவார் குழலி அம்மன் சமேத சேயுமானவ சுவாமி கோவில் கட்ட கால்கோள் விழா மற்றும் பூமிபூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி முதல் 8 மணி வரை திருமுறை வேள்வியும், 8 மணி முதல் 9 மணி வரை கால்கோள் விழாவும், 9 மணி முதல் மாலை 3 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒளியரசு தலைமை தாங்கினார். தேவகோட்டை நாராயணன் முன்னிலை வகித்தார். கோவில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை கோவை அரன்பணி அறக்கட்டளை, பெங்களூரு காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை மற்றும் ஓரியூர் வாழ் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story