விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பம் அகற்றப்படுமா?


புதிதாக நடப்பட்ட மின்கம்பம் அருகே பழைய மின்கம்பம் உள்ளதை படத்தில் காணலாம்.
x
புதிதாக நடப்பட்ட மின்கம்பம் அருகே பழைய மின்கம்பம் உள்ளதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 22 Feb 2021 12:08 AM IST (Updated: 22 Feb 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அருகே உள்ள பழைய மின்கம்பத்தில் இருந்த வயர், புதிய மின்கம்பத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் பழைய மின்கம்பம் பயனற்ற நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் சாலை வளைவில் உள்ளதால் கனரக வாகனங்கள் வளைவில் திரும்புவதற்கு மிகவும் சிரமமடையும் நிலை உள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது, அவற்றை முந்திச்செல்லும் இருசக்கர வாகனங்கள் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக நடந்து செல்பவர்கள், மின்கம்பத்தில் மோதி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story