கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம்


கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம்
x
தினத்தந்தி 22 Feb 2021 12:09 AM IST (Updated: 22 Feb 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் மேற்பார்வையில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசிம், டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள் மற்றும் பெண் ஊழியர்களிடம் கேடயம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழாமல் தடுக்க கேடயம் திட்டத்தின் உதவி எண்கள் 6383071800, 9384501999 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறுவது குறித்து விளக்கப்பட்டது.

Next Story