வாகனம் மோதி மான் படுகாயம்
வாகனம் மோதி மான் படுகாயம் அடைந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து மான்கள் வழிதவறி ஊருக்குள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி தண்ணீர் தேடி 3 வயதுடைய பெண் மான் ஒன்று பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு வந்தது. பின்னர் அந்த மான் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் மான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மானை அந்த வழியாக சென்ற இளைஞர்கள் 2 பேர் மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த மானை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story