சனிக்கிழமை வேலை நாளை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்
சனிக்கிழமை வேலை நாளை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கழகத்தின் மாநில சட்ட செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போட்டித்தேர்வில் வயது வரம்பை தளர்வு செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள்- மாணவர்கள் நலன்கருதி சனிக்கிழமை வேலை நாளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கழகத்தின் மாவட்ட செயலாளர் சிலம்பரசன், செய்தி தொடர்பாளர் காமராஜ், கழகத்தின் கல்வி மாவட்ட தலைவர்கள் முரளி (பெரம்பலூர்), சரவணன் (வேப்பூர்) மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட அமைப்பு செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story