மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 12:25 AM IST (Updated: 22 Feb 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

கூட்டேரிப்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலம், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அந்த விலை உயர்வை திரும்ப பெற கோரியும் கியாஸ் சிலிண்டர் மீது நாமம் தீட்டி, மாலை அணிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய நிர்வாகிகள் வக்கீல் தமிழரசன், நாகராஜன், காளிதாஸ், மணி, கிளை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, வளர்க்குமார், வாசு, பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story