பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மொபட்டுக்கு பாடை கட்டி நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோபால்பட்டியில் மொபட்டுக்கு பாடை கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோபால்பட்டி:
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாணார்பட்டி அருகே கோபால்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெள்ளைகண்ணன் தலைமை தாங்கினார். இதில், செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மொபட்டுக்கு பாடை கட்டியும், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story