மாவட்ட செய்திகள்

கபடி போட்டியில் தூத்துக்குடி அணிக்கு முதல் பரிசு + "||" + Kabaddi competition

கபடி போட்டியில் தூத்துக்குடி அணிக்கு முதல் பரிசு

கபடி போட்டியில் தூத்துக்குடி அணிக்கு முதல் பரிசு
கபடி போட்டியில் தூத்துக்குடி அணிக்கு முதல் இடம் கிடைத்தது.
ஆலங்குடி,பிப்.22-
ஆலங்குடி அண்ணாநகரில் ஏ.கே.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் மாநில முழுவதிலும் இருந்து 90-க்கு மேற்பட்ட கபடிக்குழுவினர் கலந்துகொண்டனர். இரவு, பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி அணி முதல் பரிசான ரூ.25 ஆயிரத்தை வென்றது. 2-வது பரிசு ரூ.20 ஆயிரத்தை ஏ.கே.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை திருவாரூர் அணியும், 4-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை பழனி அணியும் பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு கே.பி.கே. நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்

1. மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி
சிங்கம்புணரியில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியை பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.