கடலூரில் ஐ.டி.ஐ. மாணவி தீக்குளித்து தற்கொலை


கடலூரில்   ஐ.டி.ஐ. மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2021 1:03 AM IST (Updated: 22 Feb 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஐ.டி.ஐ. மாணவி தீக்குளித்து தற்கொலை

கடலூர், 
கடலூர் உண்ணாமலைச்செட்டி சாவடி தனம்நகரை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மகள் தனவந்தினி (வயது 18). இவர் கடலூர் அரசு ஐ.டி.ஐ.யில் முதலாமாண்டு கம்யூட்டர் பாடம் படித்து வந்தார். இவர் தினந்தோறும் காலையில் வெகுநேரம் கழித்து விழிப்பதோடு, வீட்டு வேலை எதுவும் செய்வதில்லை என்று கூறப்படுகிறது. இதை கேட்டால், தாய், தந்தையை தாக்கி விடுவாராம்.
சம்பவத்தன்று ஐ.டி.ஐ.க்கு சென்று விட்டு் வீட்டுக்கு வந்த தனவந்தினி, சாப்பிடாமல் இருந்ததாக தெரிகிறது. இதை அறிந்த பத்மநாபன் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர், தன்னுடைய தந்தையை அடித்து விட்டு அறைக்குள் சென்று விட்டார். அதன்பிறகு இரவு கழிவறையில்  இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவரது தாய், தந்தை சென்று பார்த்த போது, அங்கே தனவந்தினி மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு வலியால் அலறியது தெரியவந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், தீக்காயமடைந்த தனவந்தினியை  மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி அவரது தந்தை பத்மநாபன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனவந்தினி தந்தை கண்டித்ததால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story