சேவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


சேவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 22 Feb 2021 1:06 AM IST (Updated: 22 Feb 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

சேவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சிவகாசி, 
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அம்மா திடலில் வெற்றுக்கால் சேவல் கலைப்போட்டி நடை பெற்றது. போட்டியை முன்னாள் எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டது. மாலை 6 மணிவரை போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்கள் 1000 பேருக்கு பரிசுகள் வழங்கினார். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் பலராம், கருப்பசாமி, தெய்வம், கோகுலம்தங்கராஜ், சுபாஷினி, வடமலாபுரம் ஆழ்வார் ராமானுஜம், டாக்டர் விஜய்ஆனந்த், மாரீஸ்குமார், சீனிவாசபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story