குளித்தலையில் மணல் கடத்தியவர் கைது
குளித்தலையில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள நடுவதியம் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி அதனை சாக்கு பைகளில் நிரப்பி 2 மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 3 பேர், அதனை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். சரக்கு ஆட்டோ உரிமையாளர் குளித்தலை அருகே உள்ள கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story