மாவட்ட செய்திகள்

கார் மோதி டிரைவர் சாவு + "||" + Car crash driver death

கார் மோதி டிரைவர் சாவு

கார் மோதி டிரைவர் சாவு
ஆரல்வாய்மொழி அருகே சாலையை கடக்க முயன்ற டிரைவர் மீது கார் மோதி பரிதாபமாக இறந்தார்்.
ஆரல்வாய்மொழி, 

ஆரல்வாய்மொழி அருகே சாலையை கடக்க முயன்ற டிரைவர் மீது கார் மோதி பரிதாபமாக இறந்தார்்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
கார் டிரைவர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாளையத்தை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 64), கார் டிரைவர். இவர் காரில் மனைவி நூர்ஜகான், மகள்கள் சுரேகா, சுனிதா ஆகியோருடன் முப்பந்தல் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் ஊருக்கு திரும்பும்போது அருகிலுள்ள ரோட்டோரம் மரத்தடியில் உட்கார்ந்து, கொண்டுவந்த உணவை குடும்பத்துடன் சாப்பிட்டார். பின்னர் கை கழுவதற்காக சாலையை கடக்க முயன்றார்.
சாவு
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார், அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சுரேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.