பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 1:27 AM IST (Updated: 22 Feb 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சோழவந்தான்
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி சோழவந்தான் மாரியம்மன் சன்னதி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கந்தவேலு, பொன்ராஜ், சின்னச்சாமி, கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். முன்னதாக வேனை கயிறு கட்டி இழுத்தனர். கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தனர். இதில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story